புதிய நாடாளுமன்றத்தில் ஒழுகும் மழைநீர்.. வாளி வைத்த ஊழியர்கள்.! வைரல் வீடியோ…
டெல்லி : டெல்லியில் நேற்று பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. மேகவெடிப்பினால் இந்த திடீர் மழைப்பொழிவு ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த கனமழை காரணமாக ராஜிந்தர் நகர், நொய்டா எக்ஸ்பிரஸ் சாலை, மதுரா சாலை உட்பட பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. அதே போல புதிய நாடாளுமன்ற வளாகத்திலும் மழைநீர் தேங்கியுள்ளது.
புதிய நாடாளுமன்றத்தில் ஒரு பகுதியில் மழைநீர் கட்டிடத்திற்கு உள்ளே ஒழுகியது. ஒழுகிய மழைநீரை வாளி வைத்து ஊழியர்கள் பிடித்துள்ளனர் என தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து சமாஜ்வாடி கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அகிலேஷ் யாதவ் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வீடியோ வெளியிட்டு விமர்சனம் செய்துள்ளார். அதனை காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் மறுபதிவு செய்துள்ளார்.
அந்த பதிவில், இந்த புதிய பாராளுமன்றத்தை விட, பழைய பாராளுமன்றகட்டிடத்தில் உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற சிறப்பானதாக இருந்தது. பல்லாயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட நாடாளுமன்றத்தில் தண்ணீர் சொட்டுகிறது. இப்போது நாம் ஏன் பழைய பாராளுமன்ற கட்டடத்திற்கு செல்லக்கூடாது?
பாஜக அரசாங்கத்தின் கீழ் கட்டப்பட்ட ஒவ்வொரு புதிய கட்டிடத்தில் இருந்தும் நீர் சொட்டுவது அவர்களின் (பாஜக) நன்கு சிந்திக்கப்பட்ட வடிவமைப்பின் ஒரு பகுதியா என்று மக்கள் கேட்கிறார்கள். என்று அகிலேஷ் யாதவ் பதிவிட்டுள்ளார் .
इस नई संसद से अच्छी तो वो पुरानी संसद थी, जहाँ पुराने सांसद भी आकर मिल सकते थे। क्यों न फिर से पुरानी संसद चलें, कम-से-कम तब तक के लिए, जब तक अरबों रुपयों से बनी संसद में पानी टपकने का कार्यक्रम चल रहा है।
जनता पूछ रही है कि भाजपा सरकार में बनी हर नई छत से पानी टपकना, उनकी… pic.twitter.com/PpJ36k6RJm
— Akhilesh Yadav (@yadavakhilesh) August 1, 2024