C.B.I_யை தனது கைப்பாவையாக பயன்படுத்தும் பா.ஜ.க…. அகிலேஷ் யாதவ் கண்டனம்…!!

Default Image

C.B.I_யை தனது கைப்பாவையாக பாஜக பயன்படுத்தி வருவதாக அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சாரதா சீட் பண்ட் நிதி மோசடி வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு C.B.I விசாரணை_க்கு 3 முறையும் சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் C.B.I விசாரனைக்கு சென்ற போது அங்கே கொல்கத்தா காவல்துறை C.B.I அதிகாரிகளை தடுத்து நிறுத்தியது தேசியளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நேற்று இரவு கொல்கத்தா காவல் ஆணையர் வீட்டில் ஆலோசனை நடத்திய மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று இரவு முதல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.மேலும் அவர் மத்திய அரசு C.B.I_யை தவறாக பயன்படுத்துகின்றது . முறையாக அனுமதி பெறாமல் விசாரணை நடத்துவது ஏற்புடையது இல்லை என்றும் அவர் குறிப்பிட்டு தொடர்ந்து இரண்டாவது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.இதில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இது குறித்து தந்து ட்வீட்_டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள சமாஜ் வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவிக்கையில் , C.B.I அமைப்பை தனது கைப்பாவையாக பயன்படுத்து பாஜக_வின் செயல் ஜனநாயகத்துக்கு விரோதமானது.தேர்தலில் தோற்று விடுவோம் என்ற பயத்தில் மத்திய அரசு அரசியலலமைப்பு சட்ட மாண்புக்கு எதிராக செயல்பட்டு வருகின்றது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்