காங்கிரஸுக்கு 11 இடங்கள் வழங்குவதாக அகிலேஷ் யாதவ் அறிவிப்பு..!
உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸுக்கு 11 இடங்கள் வழங்குவதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார்.
80 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸும், சமாஜ்வாதியும் இணைந்து போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சிக்கும், காங்கிரசுக்கும் இடையே தொகுதி பங்கீடு குறித்து பேசப்பட்டு வந்தது.
7 இடங்களைப் ராஷ்டிரிய லோக் தளத்திற்கு (ஆர்எல்டி) சமாஜ்வாதி கட்சி ஏற்கனவே இறுதி செய்துள்ளது. இதற்கிடையில், சமாஜ்வாதி கட்சி காங்கிரசுடனான பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸுக்கு 11 இடங்கள் வழங்குவதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார்.
7 எம்எல்ஏக்கள்.. 25 கோடி பணம்.! பாஜக மீது அரவிந்த் கெஜ்ரிவால் கடும் விமர்சனம்.!
முன் தொகுதி பங்கீடு தொடர்பாக சமாஜவாதி மற்றும் காங்கிரஸ் இடையே இழுபறி ஏற்ப்பட்டது. ஆனால், பல கட்டக் பேச்சுவார்த்தைக்கு பிறகு, காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகளுக்கு இடையே தொகுதிப் பங்கீடு நடைபெற்றது. முன்னதாக, சமாஜவாதியிடம் காங்கிரஸ் அதிக இடங்களைக் கேட்டதாகவும் ஆனால் இதற்கு அகிலேஷ் தயாராக இல்லை என தகவல் வெளியானது.
இறுதியாக தற்போது சமாஜவாதிக்கும் காங்கிரசுக்கும் இடையே தொகுதி பங்கீடு ஏற்பட்டுள்ளது. 80 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேசத்தில் கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் உ.பி.யில் 71 இடங்களைக் கைப்பற்றியிருந்த பாஜகவுக்கு இந்தக் கூட்டணி பெரும் அச்சுறுத்தலாகக் கருதப்படுகிறது.
कांग्रेस के साथ 11 मज़बूत सीटों से हमारे सौहार्दपूर्ण गठबंधन की अच्छी शुरुआत हो रही है… ये सिलसिला जीत के समीकरण के साथ और भी आगे बढ़ेगा।
‘इंडिया’ की टीम और ‘पीडीए’ की रणनीति इतिहास बदल देगी।
— Akhilesh Yadav (@yadavakhilesh) January 27, 2024