அகிலேஷ் + மாயாவதி தொகுதி பங்கீடு முடிவு செய்யப்பட்டது……!!
- மத்தியில் ஆட்சியை தொடர வேண்டுமென்று பாஜகவும் , மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று காங்கிரஸ்_சும் போட்டியிடும் சூழலில் மாயாவதியும் , அகிலேஷும் கூட்டணி அமைத்துள்ளனர்.
- உத்திரபிரதேச மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சமாஜ்வாதி கட்சி கூட்டணி அமைத்து 75 தொகுதிகளில் போட்டியிடுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் சூழலில் மாநில மற்றும் தேசிய கட்சிகள் தங்களின் தேர்தல் பிரசாரம் மற்றும் கூட்டணி குறித்த வியூகங்கள் , பேச்சுவாரத்தை என தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆளும் மத்திய பிஜேபி அரசு தொடர்ந்து ஆட்சியமைக்கவும் , காங்கிரஸ் அரசு மீண்டும் ஆட்சியை பிடிக்க போட்டி போட்டு வருகின்றனர் .
இந்நிலையில் பிரதமர் வேட்பாளரை தீர்மானிக்க கூடிய மாநிலமாக பார்க்கப்படும் உத்தரபிரதேசம் மாநிலம் 80 நாடாளுமன்ற தொகுதிகளை கொண்டுள்ளது.அதிகமான இடங்களை கொண்டுள்ள இந்த மாநிலம் மீது தேசிய கட்சிகளின் பார்வை தற்போது இருக்கின்றது.
உத்திரபிரதேச மாநிலத்தில் ஏற்கனவே பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சமாஜ்வாதி கட்சி கட்சிகள் காங்கிரஸ் மற்றும் பிஜேபி_க்கு எதிராக போட்டியிடப்போவதாக அறிவித்தனர்.இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சமாஜ்வாதி கட்சி_களுக்கிடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது.அதில் பகுஜன் சமாஜ் கட்சி 38 தொகுதிகளிலும் சமாஜ்வாதி கட்சி 37 தொகுதிகளிலும் போட்டியிடவுள்ளன.மேலும் கட்சி போட்டியிடும் தொகுதி மற்றும் பெயர்களை மாயாவதியும் , அகிலேஷ் யாதவ்_வும் வெளியீட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.