சர்ச்சையான சபரிமலை………பெண்கள் நுழைந்தால் சன்னிதானத்தை……..இழுத்து மூடுங்கள்…….பந்தள மன்னர் அதிரடி…..!!!

Default Image

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் பழங்கால பண்பாட்டை உடைத்து அனைத்து வயது பெண்களும் நுழையலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி அனுமதியளித்தது.

இந்நிலையில் சபரிமலைக்கு 10முதல் 50 வயது பெண்கள் வர கோவிலில் நுழையக்கூடாது என்ற தடையை நீக்க கோரிய மனு மீது இந்த தீர்ப்பு வந்தது.இந்த நிலையில் இந்த தீர்ப்பிற்கு பெண்களே எதிர்ப்பு தெரிவித்து #SAVAESABARIMALA என்றும் ட்வீட்டரில் இந்த ஹெஸ்டெக் பரவிவந்தது.இந்த தீர்ப்பிற்கு ஐயப்ப பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பண்பாடு இப்படி பழடிக்கப்படுகிறது என்று பக்தர்களும் போராட்டம் நடத்தி வந்த நிலையில் நேற்று திறக்கப்பட்ட சபரிமலைக்கு தீர்ப்பின் படி பெண்கள் வந்தனர் அவர்களை பாதி வழியிலே மடக்கி பிடித்த பக்தர்கள் சரண கோஷங்களை எழுப்பி எதிர்ப்பு தெரிவித்தனர் இதனால் அங்கு சென்ற பெண்கள் பக்தர்களின் மனதை புண்படுத்த விரும்பவில்லை என்று வெளியேறினர்.

இந்நிலையில் இன்று காலை ஆந்திர பெண் செய்தியாளர் கவிதா உட்பட 2 பெண்களும் சபரிமலை நோக்கி ஜஜி ஸ்ரீஜித் தலைமையில் 150 போலீஸ் பாதுகாப்புடன் சன்னிதானத்தை நெருங்கினர்.இந்த பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து, சன்னிதானம் முன் ஐயப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தினர்.அவர்களுடன் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர்.ஆனால் பக்தர்கள் அனுமதிக்க மாட்டோம் என்று சரண கோஷங்களை முழங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆந்திர பத்திரிகையாளர் மற்றும் இருமுடி கட்டிய பெண் பக்தர் ஒருவரும் ஐயப்ப சன்னிதானத்தை நெருங்கிய நிலையில் அவர்களை பக்தர்கள் தடுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சபரிமலை கோயிலுக்கு சென்ற இந்த இரு பெண்களும் ஐதராபாத்தை சேர்ந்த மோஜோ தொலைக்காட்சியில் செய்தியாளராக கவிதா என்கிற பெண் பணியாற்றி வருகிறார் மற்றும் செய்தியாளர் கவிதாவுடன் செல்லும் மற்றொரு பெண் பெண்ணியவாதி ரஹானா பாத்திமா என ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்தது.

இந்நிலையில்சபரிமலைக்கு செல்ல முயன்ற பெண் பத்திரிக்கையாளர் கவிதா மற்றும் பெண்ணியவாதி ரஹானா ஃபாத்திமா ஆகிய இருவரையும் கோவிலுக்குள் நுழைக்கூடாது என்று கேரள அரசு உத்தவிட்டுள்ளது. சபரிமலை என்பது போராட்டக் களம் அல்ல என்றும் அதற்குரிய மரியாதையை கொடுக்க வேண்டும் என்று செய்தியாளர்-சமூக ஆர்வலருக்கு  அனுமதியில்லை என்று தேவசம் அதிரடி உத்தரவு பிறப்பித்து இரு பெண்களையும் திருப்பு அனுப்ப உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Image result for சபரிமலை
இந்நிலையில் பெண்கள் சபரிமலைக்குள் நுழைந்தால் சன்னிதானத்தை இழுத்து மூட வேண்டும் என்று மேல்சாந்திக்கு பந்தள மன்னர் உத்தரவிட்டுள்ளார். பெண்கள் ஐயப்பன் சன்னிதானம் அருகே வந்ததால் பரிகாரபூஜைகள் செய்த பிறகே நடை இனி திறக்கப்படும்  என்றும் பந்தள மன்னர் அறிவித்துள்ளார்.இந்நிலையில் அமைதியான சபரிமலை சர்ச்சை….தடை….போராட்டமாக மாறியுள்ளது.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்