100 கிராம் நகை, 30 கிராம் வைரம் மீட்பு.! ரஜினி மகள் வீட்டில் அவ்வப்போது திருடியது அம்பலம்.!
சினிமா இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் திருடப்பட்ட நகைகள் காவல்துறையால் மீட்கப்பட்டது.
நடிகர் ரஜினிகாந்த் மகளும், சினிமா திரைப்பட இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சமீபத்தில் சென்னை, தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்து இருந்தார்.
நகை கொள்ளை :
அதில், தனது வீட்டு லாக்கரில் வைத்து இருந்த நகைகள் மற்றும் விலைமதிப்புள்ள நகை கற்கள் திருடு போயுள்ளதாக குறிப்பிட்டு இருந்தார். இது குறித்து விசாரணை செய்த போலீசார் பல ஆண்டுகளாக வீட்டில் வேலை பார்த்து வந்த ஈஸ்வரி என்பவரை கைது செய்தனர்.
வீட்டு பணிப்பெண் கைது :
அவரது வங்கி கணக்கில் இருந்து அதிக அளவில் பணப்பரிவர்த்தனை நடைபெற்றதை வைத்து அவரை கைது செய்தனர். மேலும், ஈஸ்வரிக்கு உதவியாக இருந்த வெங்கடேசன் என்பவரையும் கைது செய்தனர்.
100 சவரன் மீட்பு :
மேலும் அவர்களிடம் இருந்து 100 சவரன் தங்க நகைகள், 30 கிராம் வைர நகைகள், 4 கிலோ வெள்ளி பொருட்கள், வீட்டு பாத்திரம் உள்ளிட்டவைகளை ஈஸ்வரியிடம் இருந்து காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். ஒவ்வொரு முறையும் சிறிது சிறிதாக நகைகளை திருடி சென்றது விசாரணையில் வெளியே தெரிந்துள்ளது.