வாடிக்கையாளர்களுக்கு ஷாக்.! எகிறுகிறது ஏர்டெல் ரீசார்ஜ் கட்டணங்கள்…

ஏர்டெல்: நேற்று தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ தனது ரீசார்ஜ் கட்டணத்தை 12 சதவீதம் முதல் 27 சதவீதம் வரையில் அதிகரித்து அறிவிப்பபை வெளியிட்டது. இதனை தொடர்ந்து இன்று பாரத் ஏர்டெல் நிறுவனமும் தங்கள் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
இந்த விலை உயரத்தப்பட்ட கட்டணமானது வரும் ஜூலை 3ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என கூறப்பட்டுள்ளது. அதன்படி, 11 சதவீதம் முதல் 21 சதவீதம் வரையில் இந்த விலையேற்றம் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வரம்பற்ற வாய்ஸ் கால் ரீசார்ஜ் ஒருமாதத்திற்கு 179 என நிர்ணயிக்கப்பட்ட கட்டணமானது, 199ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 84 நாட்களுக்கான ரீசார்ஜ் கட்டணம் 455இல் இருந்து 509ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு வருடத்திற்கான ரீசார்ஜ் கட்டணம் 1799இல் இருந்து 1999ஆக உயர்ந்துள்ளது.