ரூ.10,000 கோடி நிலுவை தொகையை மத்திய அரசுக்கு செலுத்தியது ஏர்டெல் நிறுவனம்.!

- உச்ச நீதிமன்றம் உத்தரவை முன்னிட்டு ஏர்டெல் நிறுவனம் ரூ.10,000 கோடி நிலுவை தொகையை மத்திய அரசுக்கு செலுத்தியுள்ளது.
தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய ஏஜிஆர் (adjusted gross revenue) தொகையை உடனடியாக செலுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து ஏர்டெல் நிறுவனம் ரூ.10,000 கோடி நிலுவை தொகையை மத்திய அரசுக்கு செலுத்தியுள்ளது. பின்னர் பாக்கித்தொகையை நிறுவனத்தின் தற்போதைய நிலையை ஆய்வு செய்த பிறகு செலுத்துவதாகவும் ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஏர்டெல் நிறுவனம் மத்திய அரசுக்கு மொத்தம் ரூ.35,586 கோடி செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடப்படுகிறது. இதையடுத்து மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய ரூ.50,000 கோடி தர அவகாசம் கேட்ட வோடபோன் நிறுவனத்தின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. தற்போது ரூ.2,500 கோடி தருவதாகவும், வெள்ளிக்கிழமை ரூ.1000 கோடி தருவதாக வோடபோன் அளித்த உறுதியை நீதிமன்றம் ஏற்கவில்லை என குறிப்பிடப்படுகிறது.