தொலைதொடர்பு சேவை துறையில் ஜியோ நிறுவனத்தை சந்தையில் சமாளிக்க முடியாமல் அனைத்து தொலைதொடர்பு சேவை நிறுவனங்களும் தினறி வருகிற சூழலில் தங்கள் நிலையை உறுதிபடுத்தவும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை அளித்திடவும், தங்கள் நிறுவனத்தின் சேவையை உறுதிசெய்துகொளவும் முயன்று வருகின்றனர். இந்நிலையில், ஏர்டெல் நிறுவனம் தற்போது புதிய திட்டத்தை அறிவித்துளது. இதன் படி, ஏர்டெல் நிறுவனம் ரூ. 179 விலையில் புதிய பிரீபெயிட் சலுகையை அறிவித்துள்ளது. இச்சலுகையில் வழக்கமான அன்லிமிட்டெட் பலன்களுடன், ரூ. 2 லட்சம் மதிப்புள்ள பாரதி ஆக்சா உயிர் காப்பீடு திட்டமும் சேர்த்து வழங்கப்படுகிறது என்ற செய்திதான் மேலும் சிறப்பு.
இதுமட்டுமல்லாமல் இந்த புதிய சலுகையில் அனைத்து நெட்வொர்க் எண்களுக்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 2 ஜி.பி. டேட்டா, 300 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 28 நாட்கள் வேலிடிட்டியுடன் சேர்த்து வழங்கப்படுகிறது. இதில்,மேலும் ஏர்டெல் எக்ஸ்-ஸ்டிரீம் ஆப் பிரீமியம் சந்தா, விண்க் மியூசிக் போன்றவற்றை பயன்படுத்தும் வசதிகளையும் இதில் வழங்கப்படுகிறது. இதற்கு முன்பும் ஏற்கனவே இதேபோன்ற பலன்கள் நிறைந்த சலுகையினை ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ. 149 விலையில் வழங்கி வருகிறது. ஆனால் இந்த சலுகையில் உயிர் காப்பீடு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபியின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று பாகிஸ்தானின் லாகூரில் நடைபெற்றது. தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள்…
வாஷிங்டன் : அமெரிக்க தனியார் விண்வெளி நிறுவனமான ஃபயர்ஃபிளை ஏரோஸ்பேஸின் ப்ளூ கோஸ்ட் மிஷன் 1 கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச்…
ஹைதராபாத் : தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் பின்னணிப் பாடகியாக வலம் வந்த கல்பனா அளவுக்கு அதிகமான…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நேற்று முதல் அரையிறுதி போட்டியில் ஆஸ்ரேலியா அணியை வீழ்த்தி…
சென்னை : பிரதீப் ரங்கநாதன் காட்டில் மழை தான் என்கிற வகையில், அவருடைய படங்கள் தொடர்ச்சியாக ஹிட் ஆகி கொண்டு வருகிறது.…
சென்னை : சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே புதிய வழித்தடம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால், இதற்கு இடையிலான…