ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் பெரும் கடன் பிரச்சனையில் தவித்து வந்த நிலையில், அவற்றை தீர்க்க ஒரே வழி கட்டண உயர்வு தான் என்ற நிலையில், பார்தி ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள், மொபைல் போன் சேவைக் கட்டணத்தை அதிகரித்துள்ளன.
இந்த கட்டண உயர்வானது நாளை முதல் அமலுக்கு வரும் என, வோடபோன், பார்தி ஏர்டெல் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.இதே போன்று ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் கட்டண உயர்வு டிசம்பர் 6-ல் அமலுக்கு வரும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
ஏர்டெல் கட்டண உயர்வு பார்தி ஏர்டெல் நிறுவனம், புதிய திட்டங்களில், அன்லிமிடெட் பிரிவில், 28 நாள், 84 நாள் மற்றும் 365 நாட்களுக்கான கட்டணத்தை, 41% சதவிகிதம் உயர்த்தியுள்ளது. அதன்படி, 84 நாட்களுக்கு, தினம் 1.5 ஜீபி டேட்டாவும், அன்லிமிடெட் கால் வசதியுடன் 31% சதவிகிதம் அதிகரித்தது. 448-லிருந்து, 598 ரூபாயாக உயர்ந்தது. அதைபோல் தினம், 1.5 ஜீபி டேட்டா திட்டத்திற்கான கட்டணம் 25% சதவிகிதம் உயர்த்தப்பட்டு, 199-லிருந்து 248 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே 356 நாட்களுக்கு 1,699 ரூபாயாக இருந்த நிலையில், தற்போது அது 2,398 ரூபாயாக அதிகரித்துள்ளது.
வோடபோன், ஏர்டெல் நிறுவனங்கள், தொலைதொடர்பு இணைப்பை தக்க வைத்துக் கொள்வதற்கான குறைந்தபட்ச கட்டணத்தை 49 ரூபாயாக உயர்த்தியுள்ளன. அத்துடன் ஜியோவை பின்பற்றி இதர தொலைதொடர்பு நிறுவன வாடிக்கையாளருடன் பேச புதிதாக நேர வரம்பு நிர்ணயித்துள்ளன. இந்த நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு மேல் பேசினால், நிமிடத்திற்கு, 6 காசுகள் வசூலிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளன.
வோடபோன் மற்றும் ஐடியாவில் கட்டணம் 28 நாட்களுக்கு ரூ.17-ஆக இருந்தது, தற்போது ரூ.299-ஆக அதிகரித்துள்ளது. இதே 84 நாட்களுக்கு ரூ.569-ஆக இருந்தது. தற்போது ரூ.699 அதிகரித்துள்ளது. 365 நாட்களுக்கு ரூ.1,699 இருந்த கட்டணம் ரூ.2,399 அதிகரித்துள்ளது. இந்நிலையில் இதில் எவ்வளவு இலவச கால்கள், டேட்டா கட்டணம் என விரிவாக கொடுக்கப்படவில்லை.
இந்த சமயத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும், தொலைதொடர்பு சேவை கட்டணத்தை, 40% சதவிகிதம் வரை உயர்த்தி, அதேசமயம் பிற நிறுவனங்களை விட கூடுதல் பயன்கள் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் என ஜியோ தெரிவித்துள்ளது. 40% சதவிகித கட்டணம் உயர்த்தப்பட்டாலும் அதைவிட 300 மடங்கு சலுகையை அறிவித்துள்ளது ஜியோ. இந்த நிறுவனத்தின் கட்டண உயர்வு, டிசம்பர் 6-ல் நடைமுறைக்கு வருகிறது.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…