- பெங்களுருவில் தொடர்ந்து இரண்டாவது நாளாக விமான கண்காட்சி நடைபெற்று வருகின்றது .
- பிரான்ஸ் நாட்டில் இருந்து வந்த ரஃபேல் போர் விமானமும் இந்த கண்காட்சியில் பங்கேற்றது.
இந்திய பாதுகாப்பு துறை சார்பில் ஆசியாவிலே மிகப்பெரிய விமான கண்காட்சி கர்நாடகா மாநிலம் பெங்களூரில் ஏரோ இந்தியா 2019 என்ற பெயரில் நடைபெறுகின்றது.இந்த கண்காட்சியில் அதிநவீன ரக விமானங்கள் விண்ணில் சாகசம் நிகழ்த்தின.
இரண்டாவது நாளாக நடைபெற்ற விமான சாகச கண்காட்சியில் பிரான்ஸ் நாட்டில் இருந்து வந்த ரஃபேல் போர் விமானமும் பங்கேற்றது.வானத்தில் ஒன்றன்பின் ஒன்றாக விமானங்கள் நடத்திய இந்த கண்காட்சி பார்வையாளர்களை பிரமிக்க வைத்தது.இதை கண்டு கழித்தவர் விமான கண்காட்சியை போட்டோ எடுத்து மகிழ்ந்தனர்.