பாட்னாவில் விமானநிலைய ஊழியர் வீட்டு வாசலில் சுட்டுக்கொலை
பாட்னாவில் உள்ள இண்டிகோவின் விமான நிலைய மேலாளர் ரூபேஷ் குமார் சிங் வயது 42,செவ்வாய்க்கிழமை மாலை வேலையிலிருந்து வீடு திரும்பியபோது அடையாளம் தெரியாத நபர்களால் அவரது வீட்டிற்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டார்.
மிகவும் நெருங்கிய தூரத்திலிருந்து இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும் ,இதில் அவரது மார்பில் ஏழு குண்டுகள் பாய்ந்துள்ளது என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.இந்த கொலைக்கான காரணம் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் ,இன்னும் யாரும் கைது செய்யப்படவில்லை என்று தெரிவித்தனர்.