மே 17-க்கு பிறகு விமான போக்குவரத்து படிப்படியாக தொடங்கும்!
மே 17-க்கு பிறகு விமான போக்குவரத்து படிப்படியாக தொடங்கும்.
இந்தியா முழுவதும் கொரோனா வைராசின் தீவிர கட்டுப்படுத்த, பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், இந்தியா முழுவதும் வரும் மே -17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மே-17ம் தேதிக்கு பின் ஊரடங்கு முடிவடையவுள்ள நிலையில், உள்நாட்டு விமானப் போக்குவரத்தை தொடங்குவதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இதனையடுத்து, டெல்லி, மும்பை உள்ளிட்ட முக்கிய விமானநிலையங்களில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட நிலையில், மே 17-ம் தேதித்துக்கு பிறகு உரிய கட்டுப்பாடுகளுடன் 25% விமானங்கள் இயக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், விமானத்தில் பயணம் செய்பவர்கள் கட்டாயம் அவர்களது மொபைல் போனில் ஆரோக்ய சேது ஆப்பை வைத்திருக்க வேண்டும் என்றும், இரண்டு மணி நேரத்துக்கும் குறைவான பயண நேரம் கொண்ட விமானங்களில் உணவுப் பொருள்களுக்கு அனுமதி இல்லை என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும், டெல்லி, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட இடங்களிலிருந்து விமான சேவையைத் தொடங்க பணிகள் தயார் நிலையில் இருப்பதாக விமானப் போக்குவரத்து அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.