#DelhiAir:ஐந்தாவது நாளாக ‘மிகவும் மோசமான’ நிலையில் காற்று மாசு முடங்கிய டெல்லி
டெல்லியில் காற்றின் தரம் காற்றின் தரம் தொடர்ந்து ஐந்தாவது நாளாக இன்றும் ‘மிகவும் மோசமாக’ இருப்பதாக வானிலை முன்னறிவிப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு (SAFAR) தெரிவித்துள்ளது.
இருப்பினும், ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு புதன்கிழமை 379 ஆக இருந்து இன்று 362 ஆக குறைந்துள்ளது.இதற்கிடையில், மாசுபாட்டைக் குறைக்க அவசர நடவடிக்கைகளை அறிவித்த தில்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய், நவம்பர் 21 ஆம் தேதி வரை அரசுத் துறைகளுக்கு வீட்டிலிருந்து 100 சதவீதம் வேலை இருக்கும் என்று புதன்கிழமை தெரிவித்தார்.
டெல்லியில் நவம்பர் 21ம் தேதி வரை கட்டுமானம் மற்றும் இடிப்பு பணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதுமேலும் உத்தரவு வரும் வரை பள்ளிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்கள் தேசிய தலைநகரில் மூடப்பட்டிருக்கும் என்றார்.
தில்லியில் அத்தியாவசியப் பணிகளில் ஈடுபடும் வாகனங்களைத் தவிர மற்ற அனைத்து வாகனங்களும் நுழைவதற்குத் தடை விதிக்குமாறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளோம். காவல் துறையும் போக்குவரத்துத் துறையும் இணைந்து இதை உறுதி செய்யும்” என்று கூறினார்.
காற்றுத் தர மேலாண்மை ஆணையத்தின் (CAQM) பரிந்துரைகளை கண்டிப்பாக அமல்படுத்துவதற்கான உயர்மட்டக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் ராய் கூறினார்.