டெல்லியில் காற்று மாசுபாடு – நவ.11-ஆம் தேதி வரை பள்ளிகள் மூடல்…!
டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்றின் தரம் மிகவும் மோசமாக காணப்படுகிறது. இந்த நிலையில், காற்று மாசை கட்டுப்படுத்த டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், டெல்லியில் காற்று மாசு காரணமாக நவ.11-ஆம் தேதி வரை பள்ளிகள் மூடப்படுவதாக அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார். அதன்படி 11-ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் நவ.11 வரை மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒற்றைப்படை, இரட்டைப்படை பதிவு எண் அடிப்படையில் நவம்பர் 13 முதல் வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் காற்று மாசு தடுப்பு விதியை மீறினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் டெல்லி மாநில அரசு தெரிவித்துள்ளது. வாகன பயன்பாட்டை குறைக்க 50 சதவீத பணியாளர்கள் வீடுகளில் இருந்து பணியாற்ற ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.