டெல்லியில் காற்று மாசுபாடு – பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு..!

Pollution

தலைநகர் டெல்லியில், அடிக்கடி காற்று மாசு அபாயகரமான நிலைக்கு செல்வதுண்டு. அந்த வகையில், டெல்லியில் காற்று மாசுபாடு அபாய அளவை எட்டிய நிலையில், அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசு அதிகரித்துள்ள நிலையில், இன்று காலை பல்வேறு இடங்களில் காற்றின் தரக்குறியீடு 400க்கும் அதிகமாக மதிப்பிடப்பட்டுள்ளது.  அத்தியாவசியம் இல்லாத கட்டுமானப் பணிகளுக்கு தடை, டீசல் லாரிகள் நகருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

திமுக வார்டு உறுப்பினர் மீது நடவடிக்கை தேவை! இல்லையெனில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – இபிஎஸ்

பொதுமக்கள் வசதிக்காக மெட்ரோ ரயில் தினசரி கூடுதலாக 20 சேவைகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் இரண்டு நாட்களுக்கு அனைத்து தொடக்கப் பள்ளிகளுக்கும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் விடுமுறை அறிவித்துள்ளார்.

இந்த 2 நாட்களும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.தற்போது ஏற்பட்டுள்ள காற்று மாசு உடல் ஆரோக்கியமாக உள்ளவர்களையும் பாதிக்கக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்