“டெல்லி அடுத்து காற்று மாசு” இடம் பிடித்த தலைநகரம்..!!
பெங்களூருவைச் சேர்ந்த லாப நோக்கமில்லாத ஒரு தொண்டு நிறுவனம், ஓர் ஆய்வை மேற்கொண்டது. 2017 முதல் 2018 வரை நகரத்துக்கு சுமார் 2000 வாகன ஓட்டிகளையும், மேலும் சில சாலையோரமாகவே குடியிருக்கும் மக்களையும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தினார்கள்.
அதன்மூலம், தெலங்கானாவின் தலைநகரமான ஹைதராபாத்திலும் ஆய்வு மேற்கொண்டார்கள். அதில், 2000 மக்களில் 76 சதவிகிதம் பேருக்கு காற்றின் தரக் குறைபாட்டால் ஏற்படும் உடல் பாதிப்புகள் இருப்பது தெரியவந்தது. மற்றுமொரு ஆய்வில், சுமார் 39 சதவிகிதம் மக்களுக்கு காற்று மாசால் சுவாசப் பிரச்னைகளுக்கான அறிகுறிகள் தெரிந்துள்ளன.
டெல்லிக்கு அடுத்தபடியாக, தென்னிந்தியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான ஹைதராபாத் இருக்கிறது. இந்த வரிசையில் சென்னையும் சேர்வதற்கு முன் காற்று மாசைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தாகவேண்டியது அவசியம்.
உலக ஆராய்ச்சி மையத்தின் அறிக்கையின்படி, உலகின் அதிக மாசடைந்த நகரங்களின் பட்டியலில் இருக்கும் முதல் 20 நகரங்களில், 14 நகரங்கள் இந்தியாவிலிருப்பது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU