விமானப்படையின் துணைத் தலைவராக ஏர் மார்ஷல் அசுதோஷ் தீட்சித் பதவியேற்பு..!
விமானப்படையின் துணைத் தலைவராக ஏர் மார்ஷல் அசுதோஷ் தீட்சித் இன்று பதவியேற்றார்.
விமானப்படையின் துணைத் தலைவராக ஏர் மார்ஷல் அசுதோஷ் தீட்சித் இன்று பதவியேற்றுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேஷனல் டிஃபென்ஸ் அகாடமியின் முன்னாள் மாணவரான அசுதோஷ், 1986ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி போர் விமானத்தில் பணியமர்த்தப்பட்டார்.
ஏர் மார்ஷல் அசுதோஷ் தீட்சித் பயிற்றுவிப்பாளர் மட்டுமல்லாமல் விமானங்களில் 3300 மணி நேரத்திற்கும் மேலாக பறக்கும் அனுபவம் கொண்டவர். இவர் ஆபரேஷன் சஃபேட் சாகர் மற்றும் ரக்ஷக்கில் கலந்துகொண்டுள்ளார். ஏர் மார்ஷல் தீட்சித் ஒரு மிராஜ் 2000 படைப்பிரிவுக்கு தலைமை தாங்கியும் உள்ளார்.
மேலும், அசுதோஷ் தீட்சித் தெற்கு விமானப் படையின் வான் பாதுகாப்புத் தளபதியாகவும், விமானப் படையின் துணைத் தலைவராகப் பொறுப்பேற்பதற்கு முன்பு தென் மேற்கு விமானப் படையின் மூத்த விமானப் பணியாளர் அதிகாரியாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.