வந்தே பாரத் திட்டத்தின் மூலம் ஏர் இந்தியாவிற்கு ரூ. 2,556.60 கோடி வருவாய்.! ஹர்தீப் சிங் பூரி.!
வந்தே பாரத் திட்டத்தின் மூலம் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ. 2,556.60 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது என விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் மார்ச் 23 முதல் சர்வதேச பயணிகள் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், பல்வேறு நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை சிறப்பு சர்வதேச விமானங்கள் மூலம் இந்தியாவிற்கு கொண்டு வரும் வகையில் வந்தே பாரத் திட்டத்தின் மூலம் மத்திய அரசு மே 6 முதல் சிறப்பு விமானங்களை இயங்கியது.
இந்நிலையில், ஆகஸ்ட் 31 வரை வந்தே பாரத் பணியின் கீழ் இயக்கப்படும் விமானங்களில் இருந்து ஏர் இந்தியா ரூ .2556.60 கோடி வருவாய் ஈட்டியுள்ளது என்று சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்.
ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை நாடு திரும்பிய மொத்தம் சுமார் 11 லட்சம் இந்தியர்களில், சுமார் நான்கு லட்சம் பயணிகளை ஏர் இந்தியா குழுமம் இந்தியாவுக்கு கொண்டு வந்ததாக அமைச்சர் கூறினார்.
மேலும், ஏர் இந்தியா சுமார் 1.9 லட்சம் பயணிகளை (வெளிநாட்டினர் உட்பட) இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு கொண்டு சென்றதாக தெரிவித்தார்.