ரூ.18,000 கோடி கடன் வாங்க ஏர் இந்தியா திட்டம்!
ஓராண்டுக்கு மட்டுமே குறுகிய கால கடனாக ரூ.18,000 கோடி பெற ஏர் இந்தியா முடிவு.
பாரத் ஸ்டேட் வங்கி மற்றும் பரோடா வங்கிகளில் ரூ.18,000 கோடி கடன் வாங்க ஏர் இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது. ஓராண்டுக்கு மட்டுமே குறுகிய கால கடனாக ரூ.18,000 கோடி பெற ஏர் இந்தியா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஏர் இந்தியாவை டாடா குழுமம் வாங்கியபோது வழங்கப்பட்ட கடன் வசதியின் தொடர்ச்சியாகவே தற்போது கடன் பெற முடிவு செய்துள்ளது. 2022 ஜனவரியில் எஸ்பிஐ-யிடம் ரூ.10,000 கோடியும், பரோடா வங்கியில் ரூ.5,000 கோடியும், 4.25% வட்டியில் கடன் பெற்றது டாடா நிறுவனம். தற்போது வட்டிவிகிதம் 6.5% ஆக உயர்ந்துவிட்ட நிலையில், இரு வங்கிகளில் குறுகிய காலக்கடன் பெற ஏர் இந்தியா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.