மும்பை-டெல்லி ஏர் இந்தியா விமானம் நடுவானில் பறந்துக் கொண்டிருந்தபோது அதன் தரையில் மலம், சிறுநீர் கழித்ததாக கூறி டெல்லியில் பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏஐசி 866 விமானத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்நிலையில், இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 294 (ஆபாசமான செயல்கள்) மற்றும் 510 (குடிபோதையில் ஒருவரால் பொது இடங்களில் தவறான நடத்தை) ஆகியவற்றின் கீழ் ராம் சிங் என்ற பயணி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
விமானத்தில், அவர் 17F-ல் அமர்ந்திருந்தார் என்றும், குடி போதையில் விமானத்தின் 9வது வரிசையில் அவர் மலம், சிறுநீர் மற்றும் எச்சில் துப்பியதாக அவர் மீது தொடரப்பட்ட வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற சம்பவம் முதல்முறையில்ல… முன்னதாக, இதேபோன்ற ஒரு சம்பவம் கடந்த ஆண்டு நவம்பர் 26 அன்று நடந்துள்ளது. போதையில் இருந்த ஒருவர் நியூயார்க்கில் இருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பெண் சக பயணி மீது சிறுநீர் கழித்ததாகக் கூறப்படுகிறது. இதேபோல், மற்றொரு சம்பவம், பத்து நாட்களுக்குப் பிறகு டிசம்பர் 6 அன்று பாரிஸ்-புது டெல்லி ஏர் இந்தியா விமானத்தில் பதிவாகியுள்ளது.
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல்…
இந்தியாவில் நடைபெறும் மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…
தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…
சென்னை :பாரம்பரிய மிக்க சுவையில் பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி=…
துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…