இந்தியர்களை மீட்டுவர புறப்படுகிறது ஏர் இந்திய விமானம்.! மத்திய அரசு அதிரடி நடவடிக்கை.!
- கொரோனா வைரசினால் உலக நாடுகள் அனைத்தும் அச்சத்தில் உள்ளன. இதனால் உலக நாடுகள் அனைத்தும் சீனாவில் உள்ள தங்களது குடிமக்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்தி வருகின்றன.
- அந்நாட்டில் உள்ள நூற்றுக்கணக்கான இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்துவந்தனர். இவர்களை மீட்டுவர இந்திய அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது. இதன்படி ஏர் இந்தியா விமானம் இன்று சீனாவுக்குப் புறப்பட்டவுள்ளது.
கொரோனா வைரசினால் உலக நாடுகள் அனைத்தும் அச்சத்தில் உள்ளன. சீனாவின் வுகான் நகரில் இருந்து பரவிய இந்த வைரசினால் அந்நாட்டில் இதுவரை 213க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.10,000க்கும் அதிகமானவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தியா இந்தோனேசியா, அமெரிக்கா, பிரான்ஸ் உள்பட 18 நாடுகளில் இந்த வைரஸ் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் சீனாவில் உள்ள தங்களது குடிமக்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்தி வருகின்றன. இந்த நிலையில் அந்நாட்டில் உள்ள நூற்றுக்கணக்கான இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்துவந்தனர். இவர்களை மீட்டுவர இந்திய அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது. இதன்படி ஏர் இந்தியா விமானம் இன்று சீனாவுக்குப் புறப்பட்டவுள்ளது.
The national carrier once again comes to the rescue – this time to evacuate Indians from Wuhan, the site of the outbreak of coronavirus. This mission begins today with a Jumbo 747 operating between Delhi and Wuhan.
Jai Hind
— Ashwani Lohani (@AshwaniLohani) January 31, 2020
இந்நிலையில், ஏர் இந்தியாவின் ஜம்போ ஜெட் விமானம் (AI B747) டெல்லியிலிருந்து இன்று பிற்பகல் 12.50 மணிக்கு சீனாவுக்குப் புறப்படும். சீனா செல்லும் சிறப்பு விமானத்தில் சுகாதாரத்துறை சார்பில் ஐந்து மருத்துவர்கள் தேவையான மருத்தவ உபகரணங்களுடன் பயணிக்கின்றனர். 4 விமானங்கள், 15 விமானப் பணியாளர்கள் 3 எஞ்சினியர்கள் உள்ளிட்ட 33 விமானப் பணியாளர்களும் சிறப்பு விமானத்தில் செல்வார்கள். ஏர் இந்தியா இயக்குநர் கேப்டன் அமிதாப் சிங்கும் சிறப்பு விமானத்தில் மேற்பார்வையாளராகச் செல்வார். பின்னர் 423 இருக்கைகள் கொண்ட இந்த விமானத்தில் சீனாவில் மாட்டிக் கொண்டிருக்கும் 380 இந்தியர்கள் அழைத்துவரப்படுவர்.
மேலும், உள்நாட்டு நேரப்படி வுஹான் நகரில் இரவு 10 மணிக்கு இந்தியர்களை இந்த விமானம் ஏற்றிக்கொண்டு புறப்படும், மறுநாள் அதிகாலை 2 மணிக்கு டெல்லி வந்தடையும் எனக் கருதப்படுகிறது. வானிலை காரணமாக 45 நிமிடங்கள் வரை தாமதமாகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆரம்பம் முதலே நாங்கள் சிறப்பு விமானத்துடன் தயாராக இருக்கிறோம். சீனா அரசிடமிருந்து ஒப்புதல் கிடைப்பதற்காகவே காத்திருந்தோம். எங்கள் குழுவினர் அனைவரும் சீனாவில் உள்ள இந்தியர்களை பத்திரமாக அழைத்துவர ஆவலுடன் காத்திருக்கிறோம் என்று ஏர் இந்தியா நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறுகிறார்.