பாதி வழியில் டெல்லி திரும்பிய ஏர் இந்தியா விமானம்.! காரணம் இதுதானா?

Default Image

ஒரு தவறால் ரஷ்யாவிலிருந்து இந்தியர்களை அழைத்து வருவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட விமானம் பாதி வழியில் திரும்பி வந்த சம்பவம்.

வெளிநாடுகளில் கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக சிக்கியுள்ள இந்தியர்களை அழைத்துவர கூடுதல் விமான சேவை இயக்கப்படும் என்று ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்திருந்தது. இந்த நிலையில், ரஷ்யாவிலிருந்து இந்தியர்களை அழைத்து வர, நேற்று இரவு டெல்லியிலிருந்து மாஸ்கோ கிளம்பிய ஏர் இந்தியா ஏர்பஸ் A-320 விமானம், உஸ்பெகிஸ்தான் அருகே சென்று கொண்டிருந்து போது, விமானி ஒருவருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து பாதி வழியிலேயே இரவு 12.30 மணிக்கு டெல்லி திரும்பியுள்ளது. 

ரஷ்யாவிலிருந்து இந்தியர்களை அழைத்து வருவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட விமானம் என்பதால், பயணிகள் யாரும் இல்லை. அந்த விமானத்தில் பயணித்த ஏர் இந்தியா ஊழியர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பரிசோதனையில் விமானிக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்த நிலையில், டெல்லியில் இருந்து புறப்படுவதற்கு முன்பாக, பைலட்டின் மருத்துவ பரிசோதனை அறிக்கையை ஆய்வு செய்த குழு, பாசிட்டிவ் என்பதற்கு பதிலாக நெகட்டிவ் என தவறுதலாக கூறியதே இந்த குழப்பத்திற்கு காரணம் என்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்து விரிவான விசாரணைக்கு விமானப் போக்குவரத்து இயக்குநரக அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதையடுத்து, ரஸ்யாவிலிருந்து இந்தியர்களை அழைத்து வர மற்றொரு ஏர் இந்தியா விமானம் மாஸ்கோ அனுப்பப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா நிர்வாகம் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் கொரோனா தடுப்பு விதிகளின்படி, விமானிகள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்ட பிறகுதான், விமானத்தை இயக்க அனுமதி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்