ஏர் இந்தியா விமானம் மும்மடங்கு கட்டணம் வசூலிப்பதாக இணையத்தில் வெளியான வைரல் வீடியோ.
விமான சேவை வழங்கும் நிறுவன அதிகாரியிடம், வழக்கத்தை விட மும்மடங்கு கட்டணம் வசூலித்ததற்கு பயணிகள் வாக்குவாதம் செய்யும் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த பயணிகள் சமூக இடைவெளியின்றி பயணிக்க வைத்ததாகவும் அந்த வீடியோவில் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனையடுத்து, இந்த வீடியோவை ஆராய்ச்சி செய்ததில், இந்த வீடியோ இந்திய விமான சேவை வழங்கும் விமானத்தில் எடுக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது. இந்த வீடியோ உண்மையில் பாகிஸ்தான் நட்டு விமானத்தில் எடுக்கப்பட்டதென்றும், அந்த விமானத்தில் இருக்கை மற்றும் கவர்கள் ஏர் இந்தியா விமானத்தில் இருப்பதை விட வித்தியாசமாக இருப்பதும் தெரிகிறது.
இதனையடுத்து, ஏர் இந்தியா செய்தி தொடர்பாளர் தனஞ்செய் குமார் அவர்கள் இதுகுறித்து விளக்கமளிக்கையில், வீடியோ இந்திய விமானத்தில் எடுக்கப்பட்டதாக நம்பி பலர் இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். வைரல் வீடியோ பாகிஸ்தான் நாட்டு விமானத்தில் எடுக்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.
மேலும், ட்விட்டரில் ஏர் இந்தியா கணக்கை டேக் செய்து வீடியோ பற்றி புகார் அளித்தவருக்கும், ஏர் இந்தியா ட்விட்டர் கணக்கில் இருந்து பதில் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…