திருவனந்தபுரத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் அவசர அவசரமாக தரையிறக்கம்!!

Default Image

திருவனந்தபுரத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் விண்ட்ஷீல்ட் வெடித்ததால் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.

சவுதி அரேபியாவுக்கு சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், திடீரென அதன் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இன்று காலை 7.52 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து சவுதி அரேபியாவுக்கு புறப்பட்ட விமானம், கண்ணாடியில் விரிசல் இருப்பதை விமானிகள் கவனித்த பின்னர், ஒரு மணி நேரத்திற்குள் விமான நிலையத்திற்கு திரும்பியது.

காலை 8.50 மணிக்கு விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அது சரக்குகளை மட்டுமே எடுத்துச் சென்றதாகவும் அதில் பயணிகள் யாரும் இல்லை என்றும் அதிகாரி தரப்பில் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகளின் கூறுகையில், இந்த விமானம் சவுதி அரேபியாவின் தம்மம் நோக்கி சென்று கொண்டிருந்தது. வந்தே பாரத் திட்டத்தின் ஒரு பகுதியாக, சவுதி அரேபியாவிலிருந்து இந்தியா திரும்பும் இந்திய குடிமக்களை அழைத்து வருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

விண்ட்ஷீல்ட் விரிசல் காரணமாக தரையிறக்கப்பட்ட விமானத்தில், விமானிகள் உட்பட அனைத்து குழு உறுப்பினர்களும் பாதுகாப்பாக இருப்பதாக திருவனந்தபுரம் விமான நிலைய இயக்குனர் சிவி ரவீந்திரன் தெரிவித்தார்.

மேலும், விமானத்திற்கு முந்தைய சோதனையில் விரிசல் கண்டறியப்பட்டிருந்தால், விமானம் புறப்பட்டிருக்காது என்றும் புறப்படும் போது அல்லது பயணத்தின் போது இது நடந்திருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்