டெல்லியில் ஏர் இந்தியா ஊழியர் ஒருவருக்கு கொரோனா – மூடப்பட்ட அலுவலகம்!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
டெல்லியில் உள்ள ஏர் இந்தியா ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து மூடப்பட்ட டெல்லி அலுவலகம்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் தற்பொழுது வரை குறைந்த பாடில்லை. இது வரை 4,286,755 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 288,209 பேர் உயிரிழந்துள்ளனர்.
எந்த பக்கம் திரும்பினாலும் அதிகரித்துள்ளது எனும் வார்த்தையே பேசப்படுகிறது. இந்நிலையில், தற்பொழுது டெல்லி ஏர் இந்தியா விமான நிலையத்தில் பணி புரிந்து வந்த ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இதனால், டெல்லி ஏர் இந்தியா விமான அலுவலகம் மூடப்பட்டுள்ளது. அங்கு சுற்றிலும் கிருமி நாசினி தெளிக்க உள்ளதால் இரு தினங்களுக்கு மூடப்படும் என கூறப்பட்டுள்ளது.