விமான டிக்கெட் முன்பதிவு கிடையாது.! ஏர் இந்தியா அதிரடி அறிவிப்பு.!
மத்திய அரசு ஒப்புதல் அளித்த பிறகே விமான சேவைக்கான முன்பதிவு தொடங்கும். – ஏர் இந்தியா.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் அதனை கட்டுக்குள் கொண்டுவர ஊரடங்கை மேலும் நீட்டித்து வரும் 31ஆம் தேதி வரையில் ஊரடங்கு அமலில் இருக்கும் என அரசு அறிவித்துள்ளது.
இதனால், பொது போக்குவரத்து சேவைகளில் ஒன்றான விமான சேவையும் மே 31 வரை கிடையாது. மேலும் அதன் பிறகான விமான சேவை முன்பதிவுகளும் தற்போது கிடையாது என தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அரசு அடுத்து அறிவிக்கும் வரையில் விமான சேவைக்கான முன்பதிவு கிடையாது என ஏர் இந்தியா திட்டவட்டமாக தற்போது அறிவித்துள்ளது. மத்திய அரசு ஒப்புதல் அளித்த பிறகே விமான சேவைக்கான முன்பதிவு தொடங்கும் என ஏர் இந்தியா அறிவித்துள்ளது.