வெள்ளத்தில் சிக்கிய பாட்டியை பாக்குவமாக மீட்டெடுத்த விமானப்படை வீரர்! வைரலாகும் வீடியோ!
மஹாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்களில் பருவமழை பெய்து வருகிறது. இந்த மழையால் குஜராத் மாநிலம் பெரும் பாதிப்பை அடைந்துள்ளது. அனைத்து மக்களும் வெளியில் செல்ல முடியாத நிலையில், வீட்டுக்குள் முடங்கி கிடக்கின்றனர்.
மழை விடாது பெய்து வருவதால், வீடுகளும் முழ்கும் அபாய நிலைக்கு வந்துள்ளது. இதனையடுத்து மக்களை மீட்கும் பணியில் விமானப்படை தீவிரமாக இறங்கி உள்ளது. இதுவரை 5000-க்கும் மேற்பட்ட மக்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நவ்சாரி நகரத்தில் உள்ள கிராமம் ஒன்றில், வீட்டை சுற்றிலும் வெள்ளம் சூழ்ந்த நிலையில் தவித்துக் கொண்டிருந்த பாட்டியை, விமானப்படையின் இளம்வீரர் கரண் தேஷ்முக் ஹெலிகாப்டரில் இருந்து அவர் வீட்டருகே இறங்கி என் பெண்ணை பத்திரமாக மீட்டுள்ளார். இதனையடுத்து பலரும் அந்த வீரருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிற நிலையில், இந்த வீடியோ சமூக வலைகளங்களில் வைரலாகி வருகிறது.
Marooned & scared, an old woman was too scared to emerge from her home in a submerged village in Navsari, Gujarat today. Young @IAF_MCC Flt Lt Karan Deshmukh winched himself down, calmed her and brought her up. See: pic.twitter.com/Xe5ktQx7RR
— Shiv Aroor (@ShivAroor) August 4, 2019