அபிநந்தனை மையப்படுத்தி மொபைல் கேம் வெளியிட்ட விமானப்படை !
கடந்த பிப்ரவரி மாதம் 14-ம் காஷ்மீரின் புல்வாமா பகுதியில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கம் தாக்குதல் நடத்தினர்.இந்த தாக்குதலில் இந்திய இராணுவ வீரர்கள் 40 பேர் உயிர் இழந்தார்கள்.அதன் பின்னர் அடுத்த 12 நாள்களில் அதாவது பிப்ரவரி 26-ம் தேதி இந்திய போர் விமானப்படை பாகிஸ்தான் எல்லை பகுதியான பாலகோட் பகுதியில் முகாம் மிட்டு இருந்த முகாமில் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கான தீவிரவாதிகளை உயிர் இழந்தனர்.இந்த தாக்குதலின் போது இந்திய போர் விமானம் ஓன்று பாகிஸ்தான் பகுதியில் விழுந்தது.அதில் இருந்த விங் கமாண்டர் அபிநந்தனை பாகிஸ்தான் இராணுவம் சிறை பிடித்தது.
பின்னர் சர்வேதேச நாடுகளின் அழுத்தினால் அபிநந்தன் விடுவிக்கப்பட்டார். இந்த சம்பவம் பிறகு அபிநந்தன் தேசப்பற்று மற்றும் அவரது மீசை மிகவும் பிரபலமானது.இந்நிலையில் மக்கள் மத்தியில் தேசப்பற்றை ஊக்குவிக்கவும் , விமான படையில் இளைஞர்கள் சேர்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த அபிநந்தனை முக்கிய கதாபாத்திரமாக வைத்து விமான படை ஒரு மொபைல் கேம் ஒன்றை உருவாக்கி உள்ளது.
Launch of #IAF #MobileGame : Android / iOS version of IAF developed Mobile Game (Single Player) will be launched on 31 Jul 19. Download on your Android / iOS mobile phone & cherish the thrilling flying experience. The multiplayer version will soon follow. The Teaser of the game… pic.twitter.com/yhfOrOZxWV
— Indian Air Force (@IAF_MCC) July 20, 2019
அந்த விளையாட்டின் டீசரை விமானப்படை கடந்த 19-ம் தேதி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது.இந்த கேமை வருகின்ற 31-ம் தேதி முதல் ஐபோன்களில் பதிவிறக்கம் செய்து விளையாடலாம்.தற்போது இந்த விளையாட்டில் ஒருவர் மட்டுமே விளையாட முடியும் அடுத்தகட்டமாக பலர் விளையாடும் வகையில் மாற்றியமைக்க உள்ளனர்.