காஷ்மீர் முதல் குமரி வரை வானில் விமானப்படை விமானங்கள் பறக்கும் – பிபின் ராவத்

Default Image

நாட்டில் கொரோனாவை எதிர்த்து போராடும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு ஆயுதப்படை சார்பாக நன்றியை தெரிவித்த முப்படை தலைமை தளபதி.

கொரோனா வைரசுக்கு எதிராக இந்தியா உட்பட உலகமே போராடி வருகிறது. இந்த போராட்டத்தில், மக்கள் அனைவரும் வீதிகளில் நடமாடாமல், வீடுகளிலேயே இருக்கும்படி, மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன. அதன்படி, நிறைவடைய இருந்த ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீடித்து உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதனிடையே முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி நரவானே, விமானப்படை தளபதி பதூரியா மற்றும் கடற்படை தளபதி கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், ஆயுதப்படை சார்பில் கொரோனாவுக்கு எதிராகப் போராடி வரும் நாட்டு மக்களுக்கும், வைரஸிடம் போராடி வரும் நோயாளிகளுக்கும், கொரோனாவை கட்டுப்படுத்த போராடி வரும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட துப்பரவு பணியாளர் அனைவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டவர்களை கவுரவப்படுத்தும் வகையில், நாளை காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை விமானப்படை விமானங்கள் வானில் பறக்கும் என்றும் ஹெலிகாப்டர்கள் மூலமாக மருத்துவமனைகள் மீது மலர் தூவப்படும் என கூறியுள்ளார். மேலும், கடற்படை சார்பில் கடலில் கப்பல்கள் அணிவகுப்பு நடத்தப்படும். பின்னர் பெரும்பாலான மாவட்ட மருத்துவமனைகள் முன்பு ராணுவம் சார்பில் அணிவகுப்பு மற்றும் பேண்ட் வாத்திய இசை நிகழ்ச்சி நடத்தப்படும் எனவும் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்