முதல் முறையாக இந்திய விமானத்தில் பறந்த வெளிநாட்டு விமானப் படை தலைமை தளபதி……
இந்தியப் போர் விமானமான தேஜாஸில் அமெரிக்காவின் விமானப் படை தலைமை தளபதி, பறந்தார். அலுவல் ரீதியான பயணமாக அமெரிக்க விமானப் படை தலைமை தளபதி டேவிட் கேல்ட்ஃபெய்ன் ((david goldfein)) இந்தியா வந்துள்ளார். இன்று ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் விமானப் படை தளத்துக்கு சென்ற அவர், முழுக்க முழுக்க உள்நாட்டியேலே தயாரிக்கப்பட்ட போர் விமானமான தேஜாஸில் பறந்தார்.
வெளிநாட்டைச் சேர்ந்த விமானப் படை தலைமை தளபதி ஒருவர் இந்தியாவின் இலகு ரக போர் விமானத்தில் பறப்பது இதுவே முதல் முறையாகும்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.