ஜெய் பாலஸ்தீனம்.! பாராளுமன்றத்தை அதிரவைத்த ஹைதராபாத் எம்.பி ஒவைசி.!
டெல்லி: 18வது மக்களவை முதல் கூட்டத்தொடர் புதிய பாராளுமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நேற்றும் இன்றும் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்கள் பதவியேற்று வருகின்றனர் . நேற்று பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள், ஆளும்கட்சி எம்பிக்கள் பதவி ஏற்ற நிலையில், இன்று ராகுல் காந்தி , தமிழக எம்பிக்கள் என பலர் பதவி ஏற்றுக்கொண்டனர்.
அப்போது தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மக்களவை தொகுதி எம்பி, AIMIM கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி இன்று பதவி ஏற்றுக்கொண்டார். அப்போது, அவர் உருது மொழியில் உறுதி மொழி ஏற்றுக்கொண்டார்.
பின்னர் அவர் இறுதியில், ஜெய் பீம், ஜெய் தெலுங்கானா, தக்பீர் அல்லாஹு அக்பர் என்ற கூறிக்கொண்டே ஜெய் பாலஸ்தீனம் என முழக்கமிட்டார். அந்த சமயம் பாஜக எம்பிக்கள் சிலர் “ஜெய் ஸ்ரீராம்” என்று பதில் கோஷம் எழுப்பியதால் மக்களவையில் சிறுது சலசலப்பு நிலவியது.
இஸ்ரேல் – ஹமாஸ் போரானது கடந்த 2023 அக்டோபர் முதல் தொடங்கி தற்போது வரையில் பாலஸ்தீன நாட்டின் காசா நகரில் இன்னும் சில இடங்களில் தொடர்ந்து வருகிறது. இதில், இஸ்ரேலுக்கு ஆதரவாக ஒரு தரப்பினரும், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக ஒரு தரப்பினரும் தங்கள் கருத்துக்களை பல்வேறு வகைகளில் பதிவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.