மம்தா பானர்ஜிக்கு பதிலடி கொடுத்த ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி தலைவர் ஓவைசி.!
ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சொல்லாமல் சொந்த மாநிலத்தைப் பற்றி கவலைப்படுங்கள் என்று மம்தா பானர்ஜிக்கு, ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சித் தலைவர் ஓவைசி பதிலடி கொடுத்துள்ளார்.
கொல்கத்தாவின் நடைபெற்ற பேரணி ஒன்றில் பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பாஜகவுக்கு உதவ இங்கே ஒரு கட்சி உள்ளது என்றும் வாக்குகளைப் பிப்பதற்காக ஹைதராபாத்தில் இருந்து ஒரு கட்சியைப் பிடித்துக் கொண்டு வந்திருக்கிறார்கள் எனவும் தெரிவித்திருந்தார். மேலும், பாஜக அவர்களுக்கு பணம் தருகிறது. அதனால் அவர்கள் வாக்குகளைப் பிரிக்கிறார்கள். இது பீகார் தேர்தலில் நிரூபிக்கப்பட்டது என்று ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் மீது விமர்சித்தார்.
இதற்கு பதிலடி கொடுத்த ஓவைசி, இன்றைய நாள் வரை ஓவைசியை பணத்தால் யாரும் வாங்க முடியவில்லை. மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு ஆதாரமற்றது. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அடுக்காமல் தனது சொந்த மாநிலத்தைப் பற்றி கவலைப்படுங்கள். அவரது மக்கள் பலர் பாஜகவுக்கு செல்கிறார்கள். தனது பேச்சால் பீகார் வாக்காளர்களையும் எங்களுக்கு வாக்களித்த மக்களையும் அவமதித்துள்ளார். முன்னதாக பாஜகவை மம்தா பாராட்டியுள்ளார். அவரும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஓர் அங்கமாக இருந்தார். இதுபோன்ற தேவையில்லாத வார்த்தைகளை தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.