பாஜக தலைவர் ஜெ.பி நட்டாவுடன் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை சந்திப்பு..!
அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை, பாஜக தலைவர் ஜெ.பி நட்டாவை சந்தித்துள்ளார்.
டெல்லியில் பாஜக தலைவர் ஜெ.பி.நட்டாவை அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை நேரில் சென்று சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என கூறப்படுகிறது. இருந்தும் இந்த சந்திப்பில் தமிழக அரசியல் நிலவரம், பாஜக – அதிமுக கூட்டணி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும், சமீபத்தில் பிரதமர் மோடியையும், நேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் தம்பிதுரை சந்தித்து பேசியிருந்தார். இதனைத்தொடர்ந்து இந்த சந்திப்பு நிகழந்துள்ளது. முன்னதாக, கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் 2 அல்லது 3 தொகுதிகளில் போட்டியிட அதிமுக விருப்பம் தெரிவித்த நிலையில் இந்த சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.