அதிமுக – பாஜக கூட்டணி கட்டாய கல்யாணம்-புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

Default Image
  • அதிமுக கூட்டணியில் பாஜக-பாமக-புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுக்கு இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.   
  • திமுக – பாஜக கூட்டணி கட்டாய கல்யாணம் என்று  புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக சென்னையில் நடந்த அதிமுக-பாமக-பாஜக  பேச்சுவார்த்தையில் கட்சிகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.அதேபோல் அதிமுக- பாமக இடையேயான கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.பாஜகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக.அதேபோல்  அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு  செய்யப்பட்டது.

இந்நிலையில் அதிமுக-பாஜக கூட்டணி தொடர்பாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,அதிமுக – பாஜக கூட்டணி கட்டாய கல்யாணம்.ஒரு தொகுதியில் கூட பாஜக வெற்றி பெறாது என்று  புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்