காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி எம்.பியாக பதவியேற்றார்.
இந்தியாவில் 7 கட்டமாக நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்றுள்ளார்.ஆனால் காங்கிரஸ் கட்சி படு தோல்வி அடைந்தது.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார்.உத்தர பிரதேசத்தில் உள்ள அமேதி தொகுதியிலும்,கேரளாவில் வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டார்.இதில் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி வெற்றி பெற்றார் . காங்கிரஸ் கட்சியை பொருத்தவரை மற்றொரு வரலாற்று சிறப்பு மிக்க தொகுதியான அமேதி தொகுதியில் ராகுல் தோல்வி அடைந்தார்.ராகுல் காந்தியை எதிர்த்து பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானி போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்நிலையில் இன்று 17-வது மக்களவையின் முதல் நடைபெற்று வருகிறது. இதில் வயநாடு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வாகிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி எம்.பியாக பதவியேற்றார். மக்களவை இடைக்கால சபாநாயகர் வீரேந்திரகுமார் முன்னிலையில் ராகுல் காந்தி எம்.பியாக பதவியேற்றார்.
சென்னை : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
சென்னை : மக்கள் பலரும் விரும்பி பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று…
காசா : அக்டோபர் 2023-ல் தொடங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் போரால் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக காசா நகர்…
கேரளா : பராசலாவை அடுத்த மூறியன்கரை பகுதியை சேர்ந்த இளைஞர் ஷாரோன் ராஜ் என்பவருக்கு அவரை காதலித்து வந்த கிரிஷ்மா கடந்த…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து அப்பகுதியில் 2வது விமான நிலைய முனையமாக காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிய…