காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி எம்.பியாக பதவியேற்றார்

Default Image

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி எம்.பியாக பதவியேற்றார்.
இந்தியாவில் 7 கட்டமாக நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்றுள்ளார்.ஆனால் காங்கிரஸ் கட்சி படு தோல்வி அடைந்தது.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார்.உத்தர பிரதேசத்தில் உள்ள அமேதி தொகுதியிலும்,கேரளாவில்  வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டார்.இதில் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி  வெற்றி பெற்றார் . காங்கிரஸ் கட்சியை பொருத்தவரை மற்றொரு வரலாற்று சிறப்பு மிக்க தொகுதியான அமேதி தொகுதியில் ராகுல் தோல்வி அடைந்தார்.ராகுல் காந்தியை எதிர்த்து  பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானி போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்நிலையில் இன்று 17-வது மக்களவையின் முதல் நடைபெற்று வருகிறது. இதில் வயநாடு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வாகிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி எம்.பியாக பதவியேற்றார். மக்களவை இடைக்கால சபாநாயகர் வீரேந்திரகுமார் முன்னிலையில் ராகுல் காந்தி எம்.பியாக பதவியேற்றார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்