அகமதாபாத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு சம்மன்
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அகமதாபாத் நீதிமன்றம், அவதூறு வழக்கில் சம்மன் அனுப்பியுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக பாஜக கவுன்சிலர் கிருஷ்ணாவதன் பிரம்பாட் என்பவர் அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அந்த வழக்கில், தேர்தல் பிரச்சாரத்தின் போது, பாஜக தலைவர் அமித்சாவை கொலை குற்றவாளி என விமர்சனம் செய்ததாக சுட்டிக்காட்டி, வழக்கு தொடர்ந்திருந்தனர். மேலும், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.எஸ்.தாபி, ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார். மேலும், ஜூலை 6-ந் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு தெரிவித்துள்ளார்.