அகமதாபாத்: லாரி மீது வேன் மோதி 3 குழந்தைகள் உள்பட 10 பேர் உயிரிழப்பு! பிரதமர் நிவாரணம் அறிவிப்பு!

ahmedabad accident

குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே நிறுத்தப்பட்ட லாரி மீது மினி வேன் மோதி 3 குழந்தைகள் உள்பட 10 பேர் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. அதாவது, அகமதாபாத் அருகே பவ்லா-பகோதரா நெடுஞ்சாலையில் நடந்த பயங்கர விபத்தில், பஞ்சர் காரணமாக சாலையோரம் நின்றிருந்த லாரி மீது மினி டிரக் மோதியதில், கேடா கிராமத்தைச் சேர்ந்த குழந்தைகள், பெண்கள் என 10 பேர் உயிரிழந்தனர்.

அகமதாபாத் நோக்கிச் சென்ற மினி வேனில் மொத்தம் 23 பேர் பயணம் செய்தனர், அதில் மூன்று குழந்தைகள் உள்பட 10 பேர் இறந்த நிலையில், இரண்டு பேர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளனர். இதுகுறித்து அகமதாபாத் ரூரல் எஸ்பி அமித் கூறுகையில், பாவ்லா-பகோதரா நெடுஞ்சாலையில் மினி லாரி மற்றொரு லாரி மீது மோதியதில் 10 பேர் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களில் 5 பெண்கள், 2 ஆண்கள் மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. RTO மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) ஆகியவையும் இதில் ஈடுபட்டுள்ளன. அகமதாபாத்தில் இருந்து 70 கிமீ தொலைவில் பவ்லா-பகோதரா நெடுஞ்சாலையில் இந்த கோர விபத்து நடந்துள்ளது எனவும் கூறியுள்ளார்.

இந்த விபத்தை அடுத்து பிரதமர் மோடி நிவாரணம் அறிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள பாவ்லா – பகோதரா நெடுஞ்சாலையில் நடந்த சாலை விபத்து வேதனை அளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவிப்பதாவும் கூறியுள்ளார்.

மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உள்ளாட்சி நிர்வாகம் அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது என்றும் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 பிரதமர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்