பணம் வேண்டுமா ATM வாருங்கள்! இனி என்ன நோய் என்று தெரியனுமா AHM வாருங்கள்!
நமது வங்கி கணக்கிலிருந்து பணம் பெற, ஏடிஎம் மையம் செல்வது போல, இனி நம் உடலில் ஏதேனும் பிரச்சனை என்றால் அது என்ன நோய் என்று தெரிந்து கொள்ள ஏ.எச்.எம் சென்றால் போதும். அங்கு 58 வகையான நோய்க்கு பரிசோதனைகளை மெஷின் மூலம் நாமே செய்து கொள்ளும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த ஏ.எச்.எம் மிஷினை தற்போது சன்ஸ்கிரிட் ஸ்மார்ட் சொலியூஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பாக ஸ்டார்ட் அப் லிமிடெட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மெஷின் தற்போது முக்கியமான நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மெஷின் நமது உடலில் உள்ள கொழுப்பின் அளவு, ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின், டெங்கு, மலேரியா, டைபாய்டு, எச்.ஐ.வி போன்ற நோய்களை கண்டறியும் வசதி உள்ளது.
இந்த மெஷின் தற்போது இந்தூர், புவனேஸ்வர், குர்ஹான் ஆகிய இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து முக்கிய இடங்களிலும் இந்த மெஷின் வைக்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.