மூன்றாவது முறை பிரதமர்… மூன்றாவது பொருளாதார நாடு இந்தியா.! மோடி உறுதி.!
கத்தார் நாட்டில் பிஏபிஎஸ் அமைப்பு சார்பில் 27 ஏக்கர் நிலப்பரப்பில் பிரம்மாண்டமாக சுவாமி நாராயணன் கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலை இன்று பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். ஏழு கோபுரங்கள் கொண்ட இந்த கோவில் நிலநடுக்கம், அதீத வெப்பம் ஆகியவற்றால் பாதிக்கப்படாமல் இருக்க பல்வேறு தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த கோவில் 400 மில்லியன் ஐக்கிய அரபு பணமதீப்பீடு செலவில் கட்டப்பட்டுள்ளது.
துபாயில் புதிய சிபிஎஸ்இ அலுவலகம்… பிரதமர் மோடி அறிவிப்பு
இதற்காகவும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளுக்காகவும் 2 நாள் பயணமாக ஐக்கிய அரேபிய நாடுகள் சென்றுள்ளார் பிரதமர் மோடி. நேற்று பிரதமர் மோடி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் அபுதாபிக்கு சென்றார். அங்கு பிரதமர் மோடியை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சையத் அவர் ஆரத்தழுவி வரவேற்றார். பின்னர் பிரதமர் மோடிக்கு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது.
இரு நாட்டு தலைவர்கள் சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையில் பல்வேறு ஒப்பந்தங்கள் இருநாட்டு தலைவர்கள் முன்னிலையில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதில் குறிப்பாக இந்திய நாட்டின் யுபிஐ (UPI) பரிவர்த்தனை மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஏஏஎனஐ (AANI) பரிவர்த்தனை ஆகியவை ஒன்றிணைக்கப்பட்டன. இருநாட்டு டெபிட் கார்டுகளும் இணைக்க ஒப்பந்தம் போடப்பட்டது. அதனை தொடர்ந்து முதல் பரிவர்த்தனையை பிரதமர் மோடி மற்றும் ஐக்கிய அமீரக அதிபரும் இணைந்து செயல்படுத்தினர்.
அதனை தொடர்ந்து அபுதாபியில் ‘அஹ்லான் மோடி’ எனும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் சுமார் பல ஆயிரம் UAE வாழ் இந்தியர்கள் பங்கேற்றனர். அதில் பேசிய பிரதமர் மோடி, அபுதாபி வாழ் இந்தியர்களை சந்தித்ததில் பெருமை கொள்வதாக தெரிவித்தார். மேலும் 2024இல், தான் மூன்றாவது முறையாக பிரதமர் ஆவேன். அப்போதும் மோடியின் வாக்குறுதிகள் ,முழுதாக நிறைவேற்றப்படும்.0
மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும். 2047இல் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதே நமது இலக்கு என்றும் கூறினார். மேலும், அங்குள்ள மக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பேசினார். இறுதியாக பாரத் மாதா கி ஜே என்று முழக்கமிட்டு தனது உரையை முடித்துக் கொண்டார் பிரதமர் மோடி.
மேலும், துபாயில் புதிய சிபிஎஸ்சி அலுவலகம் விரைவில் நிறுவப்படும் என்றும், இது இங்குள்ள இந்திய சமூகத்திற்கு சிறந்த கல்வியை வழங்க உதவிகரமாக இருக்கும் என குறிப்பிட்டார். இந்தியாவிற்கும் ஐக்கிய அரபு மற்றும் இடையிலான கலாச்சார உறவு மிகவும் பாராட்டுக்குரியது. இரு நாடுகளின் சாதனைகளும் உலகத்திற்கு முன்மாதிரியாக இருக்கும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.