உத்தரவாதம் அளிக்கத் தயார் -விவசாயிகளுக்கு மத்திய அமைச்சர் கடிதம்
மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் ,விவசாயிகளுக்கு மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கடிதம் எழுதியுள்ளார்.
விவசாயிகளுக்கு எழுதிய எட்டு பக்க கடிதத்தில், குறைந்தபட்ச ஆதார விலை தொடர்பாக எழுத்துப்பூர்வ உத்தரவாதம் அளிக்க அரசாங்கம் தயாராக உள்ளது.அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களால் பெரும்பாலான விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆனால் பொய்யை அடிப்படையாகக் கொண்டு, பதட்டங்களை உருவாக்கும் சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக ஒரு குறிப்பிட்ட பிரிவினரால் சில குழப்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
“நான் ஒரு விவசாயியின் குடும்பத்தைச் சேர்ந்தவன், குழந்தை பருவத்திலிருந்தே, விவசாயிகளின் கடினமான வாழ்க்கையை நான் அனுபவித்திருக்கிறேன்.சட்டத்தை அமல்படுத்திய பின்னர், குறைந்தபட்ச ஆதார விலை கொள்முதல் இந்த முறை ஒரு புதிய சாதனையை படைத்துள்ளது என்பது மிகவும் திருப்திகரமாக இருக்கிறது” .குறைந்தபட்ச ஆதார விலை பெயரில் ஒரு பொய் பரப்பப்படுகிறது. உண்மை எதுவும் மாறப்போவதில்லை” என்பதாகும்.”கடந்த ஆறு ஆண்டுகளில், மோடி அரசு விவசாயிகளுக்காக நிறைய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்த மசோதாக்கள் மூலம், விவசாயிகள் தங்கள் தயாரிப்புகளை எங்கு வேண்டுமானாலும் விற்க அரசாங்கம் கூடுதல் அனுமதி வழங்கியுள்ளது”. இது தொடர்பாக எழுத்துப்பூர்வ உத்தரவாதம் அளிக்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் நரேந்திர சிங் தோமர் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
आप विश्वास रखिये, किसानों के हितों में किये गए ये सुधार भारतीय कृषि में नए अध्याय की नींव बनेंगे, देश के किसानों को और स्वतंत्र करेंगे, सशक्त करेंगे। pic.twitter.com/bwA17HXph3
— Narendra Singh Tomar (@nstomar) December 17, 2020