காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் வேளாண் சட்டங்கள் குப்பை தொட்டியில் வீசப்படும் – ராகுல் காந்தி
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் 3 வேளாண் சட்டங்களும் குப்பை தொட்டியில் வீசப்படும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்திரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருள்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் போது இரு அவைகளிலும் நிறைவேற்றம் செயயப்பட்டது.இந்த மசோதாவிற்கு குடியரசு தலைவரும் ஒப்புதல் அளித்துவிட்டார். இந்த சட்டமும் அமலுக்கு வந்துவிட்டது.
இந்த மசோதாக்களுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப், உத்தரப்பிரதேச மாநில விவசாயிகள் கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .இதனிடையே 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி பஞ்சாப் மாநில விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எனேவ காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் 3 நாட்களுக்கு டிராக்டர் பேரணி நடத்துகிறார்.பஞ்சாப் மாநிலம் மோகாவில் முதல் நாளான இன்று பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் ராகுல் காந்தி,பஞ்சாப் முதலமைச்சர் அம்ரீந்தர் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.அப்பொழுது ராகுல் காந்தி பேசுகையில் , காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் 3 வேளாண் சட்டங்களும் குப்பை தொட்டியில் வீசப்படும்.3 வேளாண் சட்டங்களை அமல்படுத்த வேண்டிய அவசியம் என்ன ? என்று கேள்வி எழுப்பினார்.இந்த சட்டங்களுக்கு விவசாயிகளின் ஆதரவு இருப்பதாகக் கூறும் பிரதமர் நரேந்திர மோடி, இதுகுறித்து ஏன் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்கவில்லை ? என்றும் விவசாயிகள் இந்த சட்டங்களால் மகிழ்ச்சியாக இருந்தால், ஏன் நாடு முழுவதும் அவர்கள் போராட வேண்டும்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.