பாஜக உங்களுக்கு அளித்த இன்னல்களிலும் துவண்டுவிடாமல், அயராது போராடிய ஒவ்வொரு விவசாயிகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என மம்தா ட்வீட்.
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக 2020, நவம்பர்- 25 ஆம் தேதி முதல் விவசாயிகள் போராடி வருகின்றனர். தலைநகர் டில்லியில் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள், விவசாய சங்கங்கள் கடந்த ஓராண்டிற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது பிரதமர் மோடி அவர்கள் இந்த மூன்று வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார்.
வேளாண் சட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளதோடு, விவசாயிகளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள், இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பாஜக உங்களுக்கு அளித்த இன்னல்களிலும் துவண்டுவிடாமல், அயராது போராடிய ஒவ்வொரு விவசாயிகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இது உங்கள் வெற்றி! இந்த போராட்டத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்.’ என பதிவிட்டுள்ளார்.
லக்னோ : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ அணியும் மோதியது. போட்டியில் டாஸ் வென்ற…
ஆந்திரா : ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் மனைவி அன்னா லெஜ்னேவா தனது மகன் தீ விபத்தில் சிக்கி உயிர்தப்பியதற்கு…
சென்னை : தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியீட்டு இருந்தார்.…
லக்னோ : சென்னை அணிக்கு எதிராக இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்தது. 180 ரன்களுக்கு…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அரசியல் வட்டாரம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. உதாரணமாக, மத்திய அமைச்சரும், பாஜக…
லக்னோ : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் லக்னோவில்…