வேளாண் சட்டம் ரத்து : ‘இது உங்கள் வெற்றி’ – மம்தா பானர்ஜி ட்வீட்

Default Image

பாஜக உங்களுக்கு அளித்த இன்னல்களிலும் துவண்டுவிடாமல், அயராது போராடிய ஒவ்வொரு விவசாயிகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என மம்தா ட்வீட். 

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக 2020, நவம்பர்- 25 ஆம் தேதி முதல் விவசாயிகள் போராடி வருகின்றனர். தலைநகர் டில்லியில் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள், விவசாய சங்கங்கள் கடந்த ஓராண்டிற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது பிரதமர் மோடி அவர்கள் இந்த மூன்று வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார்.

வேளாண் சட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளதோடு, விவசாயிகளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள், இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பாஜக உங்களுக்கு அளித்த இன்னல்களிலும் துவண்டுவிடாமல், அயராது போராடிய ஒவ்வொரு விவசாயிகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இது உங்கள் வெற்றி! இந்த போராட்டத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்.’ என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்