இந்தியாவில் கொரோனா 2 வது அலையின் தாக்கமானது மிகுந்த பேரழிவையே ஏற்படுத்தியுள்ளது, அதில் இந்திய பொருளாதாரம் கடும் சரிவினை தந்தித்துள்ளது. மேலும் நிதி ஆயோக் உறுப்பினர் (வேளாண்மை) ரமேஷ் சந்த் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, மே மாதத்தில் கிராமப்புறங்களில் கொரோனா நோய்த்தொற்று பரவுவதை தொடர்ந்து, கொரோனா வைரசின் 2 வது அலை இந்திய விவசாயத் துறையை எந்த வகையிலும் பாதிக்காது என்று கூறியுள்ளார்.
மேலும், மானியம் குறித்த இந்தியாவின் கொள்கைகள் விலை மற்றும் தொழில்நுட்பமானது அரிசி, கோதுமை மற்றும் கரும்பு ஆகியவற்றிற்கு அதிக அளவில் ஆதரவாக உள்ளன. மேலும் கொள்முதல் மற்றும் குறைந்தபட்ச ஆதரவு விலைக் கொள்கையை பருப்பு வகைகளுக்கு சாதகமாக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக மே மாத தொடக்கத்தில் விவசாய நடவடிக்கைகள் மிகக் குறைவு என்றும் குறிப்பாக நிலம் சார்ந்த நடவடிக்கைகள் குறைவாக இருந்தது என்றும் தெரிவித்துள்ளார். இது (மே) ஒரு கோடை மாதமாகும், அப்போது எந்த பயிரும் விதைக்கப்படுவதில்லை, சிறிதளவு காய்கறிகள் மற்றும் சில பருவகால பயிர்களைத் தவிர எந்த பயிரும் அறுவடை செய்யப்படுவதில்லை என்று சந்த விளக்கியுள்ளார்.
விவசாய நடவடிக்கைகள் மார்ச் மாதத்தில் அல்லது ஏப்ரல் நடுப்பகுதி வரை உச்சம் பெறுகின்றன என்றும் தெரிவித்துள்ளார். மேலும் நகர்ப்புறங்களில் கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக தொழிலாளர்கள் கிராமங்களை நோக்கி நகரத் தொடங்கியுள்ளனர் என்றும், இந்த தொழிலாளர்கள் விவசாயத் துறையில் வாழ்வாதாரத்திற்காக பணியாற்ற தயாராக உள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் 2021-22 ஆம் ஆண்டில் விவசாயத் துறை 3 சதவீதத்திற்கும் அதிகமாக வளரும் என்றும், கடந்த நிதியாண்டில் பண்ணைத் துறை 3.6 சதவீதமாக வளர்ந்தது என்றும் சந்த் கூறியுள்ளார்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படம் வரும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், கடந்த ஞாயிற்று கிழமை ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில்…
சென்னை : நடிகராக மட்டுமல்லாமல் தனக்கு பிடித்த கார் பந்தைய போட்டிகளிலும் தனது திறனை வெளிக்காட்டி வருகிறார் நடிகர் அஜித்…
லக்னோ : ஐபிஎல் 2025-ன் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இன்றைய…