விவாதமின்றி விவசாய சட்டங்கள் ரத்து செய்யப்பட்டது குறித்து காங்கிரஸ் தலைவர் பி.சிதம்பரம் பிரதமர் மோடியை சாடியுள்ளார்.
மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட புதிய 3 விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளே இந்த விவசாய சட்டம் மூன்றும் விவாதங்களின்றி ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் விவசாய சட்டங்கள் ரத்து செய்யும் மசோதா தாக்கல் செய்யும் பொழுது விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு மக்களவை ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் இது தொடர்பாக கூறியுள்ள காங்கிரஸ் தலைவர் பி சிதம்பரம் அவர்கள், விவாதம் இன்றி விவசாய சட்டம் ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூட்டம் நடத்தப்படுவதற்கு முன்னதாக பிரதமர் எந்த பிரச்சனையாக இருந்தாலும் விவாதிப்பதற்கு முன் வந்தார். ஆனால் முதல் நாளிலேயே வேளாண் சட்டங்கள் விவாதம் இல்லாமல் ரத்து செய்யப்பட்டது என அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதோ அந்த பதிவு ,
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…
ஒடிசா : இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி தங்களது சொந்த மண்ணில் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட…
டெல்லி : கடந்த பிப்ரவரி 5-ல் நடைபெற்ற டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. காலை முதலே ஆளும்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. தேர்தலில் பெறப்பட்ட வாக்குகள் இன்று காலை 8…
டெல்லி : டெல்லி சட்டப்பேரைவை தேர்தலில் பாஜக பெரும்பான்மை தொகுதிகளில் முன்னிலை, வெற்றி என பதிவு செய்து வருகிறது. இதனால்,…