வேளாண் சட்டங்களை ரத்து செய்வது தொடர்பாக மத்திய அரசுடன் 7 ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படாவிட்டால், குடியரசு தினத்தன்று டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்த விவசாய அமைப்புகள் திட்டமிட்டுள்ளனர்.
அண்மையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி ஹரியானா, குஜராத், பஞ்சாப், உத்தரப்பிரதேம் உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர், இன்று 39 ஆம் நாளாக டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், வேளாண் சட்டங்களை திரும்பபெறக்கோரி எதிர்க்கட்சிகள் உட்பட பலரும் மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
விவசாயிகளின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், மத்திய அரசு, விவசாயிகளுடன் 6 முறையாக பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் அது எதுவும் பலனளிக்கவில்லை. வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யும் வரை இந்த போராட்டம் தொடரும் என விவசாயிகள் அமைப்புகள் தெரிவித்துக்கொண்டு வருகின்றனர். இதனைதொடர்ந்து, நாளை ஏழாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
இந்த பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டவில்லை என்றால், பல்வேறு முற்றுகை போராட்டங்களை தீவிரப்படுத்த உள்ளதாக விவசாய அமைப்புகள் தெரிவித்துள்ளனர். அந்தவகையில், பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படாவிட்டால், குடியரசு தினத்தன்று டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், மாநில ஆளுநர் மாளிகைகளை முற்றுகையிடவும் விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் - மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இடையிலான 1990-களில் ஏற்பட்ட உரசல்கள் பற்றி பல்வேறு…
டெல்லி : ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று ரெப்போ வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்பை…
சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…
வாஷிங்டன் : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
பஞ்சாப் : ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி போராடி தோல்வியடைந்தது, 18…