வேளாண் சட்டம்: உங்கள் கருத்துக்களை இந்த இணையத்தில் தெரிவிக்கலாம்.!
மூன்று வேளாண் சட்டங்களை குறித்து விமர்சனம், கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகளை வழங்குமாறு உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழு அழைப்பு விடுத்துள்ளது.
புதிய வேளாண் சட்டங்கள் குறித்து அரசு மற்றும் விவசாயிகள் சார்பில் தெரிவிக்கப்படும் பரிந்துரைகளை அறிக்கைகளாக சமர்ப்பிக்க உச்சநீதிமன்றம் நிபுணர்கள் குழுவை nநியமித்து உத்தரவிட்டிருந்தது. இந்த குழு 3 புதிய வேளாண் சட்டங்கள் குறித்து விவசாய சங்கங்கள், விவசாய உற்பத்தியாளர்கள் அமைப்புகள் மற்றும் விவசாய தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருப்பவர்களிடம் இருந்து கருத்துக்கள், விமர்சனங்கள் கேட்கப்படுகிறது.
இதன்மூலம் இந்திய விவசாயிகளின் நலனை பாதுகாக்க சம்மந்தப்பட்டவர்களின் கருத்துக்களை தொகுத்து உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று நிபுணர் குழு தெரிவித்துள்ளது. எனவே, சம்மந்தப்பட்ட அனைவரும் இந்த விஷயத்தில் தங்கள் விமர்சனங்கள், கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகளை தெரிவிக்குமாறு அந்த குழு கேட்டு கொண்டுள்ளது. இதற்காக கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகளை https://www.farmer.gov.in/sccommittee/ என்ற இணையத்தின் வாயிலாக கருத்துக்களை வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் தொடர்ந்து 50 நாட்களும் மேலாக போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கையாக இருந்து வருகிறது. புதிய வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அசோக் குலாட்டி, பிரமோத் ஜோஷி, அனில் கன்வத் ஆகியோரை கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.