இந்திய பாதுகாப்புத் துறையில் அக்னி வீர் என்ற புதிய வேலைவாய்ப்பு துறையை உருவாக்கி உள்ளது மத்திய அரசு.முப்படைகளில் இளைஞா்கள் தற்காலிகமாகப் பணி செய்வதற்கு ‘அக்னிபத்’ என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில்,இந்த திட்டத்தின் மூலம் ராணுவத்தின் மூன்று படை பிரிவுகளிலும் 4 வருட ஒப்பந்தத்தில் “அக்னி வீர் ” எனப்படும் வீரர்கள் பணியில் அமர்த்தப்பட உள்ளனர். ‘அக்னிபத்’ ஆட்சேர்ப்புத் திட்டத்திற்கான வயது வரம்பு குறைந்தபட்சம் 17.5 அதிகபட்சமாக 23-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும்,மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபத் திட்டத்துக்கு இளைஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில்,ஜம்மு காஷ்மீர்,டெல்லி,அரியானா,உத்தர பிரதேசம்,பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் தொடர்ந்து இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.தமிழகத்திலும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில்,அக்னிபத் திட்டத்திற்கு எதிராக தொடரும் போராட்டங்களுக்கு மத்தியில்,இத்திட்டத்தின்கீழ் துணை ராணுவத்தில் சேரும் அக்னிபத் வீரர்களுக்கு மத்திய ஆயுதப்படை,அசாம் ரைபிள்ஸ் பிரிவில் 10% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது.
இந்நிலையில்,அக்னிபத் ஆட்சேர்ப்பு திட்டம் பற்றிய விவரங்களை இந்திய விமானப்படை வெளியிட்டுள்ளது.அதன்படி,இந்திய விமானப்படையால் வெளியிடப்பட்ட விரிவான விவரங்கலானது,அக்னிபத் திட்டத்தின் ஆட்சேர்ப்பு தகுதிக்கான அளவுகோல்கள்,தேர்வு செயல்முறை மற்றும் பலன்கள் உட்பட திட்டத்தின் பல்வேறு அம்சங்களைக் குறிப்பிடுகிறது.
அதன்படி,அக்னிபத் ஆட்சேர்ப்பு செயல்முறை 18 வயதுக்குட்பட்டவர்களுக்கும் பொருந்தும் என்பதால்,விண்ணப்பப் படிவத்தில் சிறார்களின் பெற்றோர் கையொப்பமிட வேண்டும் எனவும், மேலும்,இத்திட்டத்தின் அனைத்து விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை முறையாக ஏற்று அக்னிவீரர்களும் ஆவணத்தில் கையொப்பமிடப்பட வேண்டும் என்றும் என்று IAF ஆவணம் தெரிவித்துள்ளது.
IAF அக்னிவீர்ஸ் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் இங்கே உள்ளன:
சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…
சென்னை: பொங்கல் திருநாளையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்காக திருச்சி -தாம்பரம் - திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு…
புதுச்சேரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ. 750 வங்கி கணக்கில்…
கோவா: நடிகை சாக்ஷி அகர்வால் தனது சிறுவயது நண்பரான நவனீத் மிஸ்ராவை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். அவர்களின் திருமணம் நேற்று…
தெலுங்கானா: ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் கடந்த டிச,4-ம் தேதி அன்று ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடலை…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி ஒரு ஆண்டு நிறைவையெட்டி தமிழக முழுவதும் மக்கள் நலப்பணிகளை தீவிரப்படுத்தி தவெக…